ஐபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம்

ஐபிஎல் 2025 தொடர் தொடங்க சில நாட்களுக்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி புதிய கேப்டனாக அக்சர் படேலை நியமித்துள்ளது. முந்தைய கேப்டன் ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து, இந்தப் பொறுப்பு அக்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம்

அக்சர் படேல் இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 1653 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகளுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் முக்கிய வீரராக விளையாடி வந்த அவர், தற்போது அணி தலைவராக பொறுப்பேற்கிறார்.

டெல்லி அணியின் கேப்டன் பதவிக்காக கே.எல். ராகுலின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அணியை வழிநடத்த ராகுல் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியதால், அக்சருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்:
அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், மிட்செல் ஸ்டார்க், கே.எல். ராகுல், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், டி. நடராஜன், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, மோஹித் சர்மா, ஃபாஃப் டு பிளெசிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விபராஜ் நிகம், துஷ்மந்த சமீர, மாதவ் திவாரி, திரிபூர்ணா விஜய், மன்வந்த் குமார், அஜய் மொண்டல், டோனோவன் ஃபெரீரா.

இந்த மாற்றம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எவ்வாறு சாதகமாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow