சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: அரையிறுதியில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் மோதல்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) டி20 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) டி20 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இலங்கை அணி, 4வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணி, லீக் சுற்றில் 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்திய அணியும் 4 வெற்றிகளை பெற்றிருந்தாலும், இலங்கை அணி மேல் ரன் ரேட் காரணமாக முதலிடம் பிடித்தது. இதற்கமைய, இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்வதில் இலங்கை அதிக தன்னம்பிக்கையுடன் உள்ளதாக கருதப்படுகிறது.
முன்னதாக, இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க, பிரைன் லாரா தலைமையிலான வெ.இ அணி, ‘யுனிவர்சல் பாஸ்’ கிறிஸ் கேல் உள்ளிட்ட வீரர்களின் அதிரடி ஆட்டத்திலேயே அதிகம் நம்பிக்கை வைத்து இருக்கிறது. கடந்த 4 மாஸ்டர்ஸ் ஆட்டங்களில், இலங்கை 3 போட்டிகளில் 2, 19, 21 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
முக்கியமாக, இந்த 4 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியடைந்துள்ளது. எனவே, இன்றைய போட்டியில் டாஸ் வெல்வது அணிகளின் வெற்றிக்கு முக்கிய பாதையை அமைக்கக்கூடும்.
What's Your Reaction?






