இண்டியானா வெல்ஸ் ஓபன்: அரைனா சபலென்கா அபார வெற்றி!
இண்டியானா வெல்ஸ் ஓபன் போட்டியில் அரைனா சபலென்கா, எம்மா நவரோ, அலெக்ஸ் டி மினார், பெஞ்சமின் ஷெல்டன் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், இண்டியானா வெல்ஸ் நகரில் நடந்து வரும் இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனை அரைனா சபலென்கா, அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லரை நேர்செட் கணக்கில் (7-6, 6-3) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதேபோல், அமெரிக்காவின் 10-ம் நிலை வீராங்கனை எம்மா நவரோ, ரோமானியாவின் சொரானா கிர்ஸ்டியாவை கடுமையான போராட்டத்தில் (3-6, 6-1, 6-4) வென்று அடுத்த கட்டத்துக்கு தகுதி பெற்றார்.
ஆடவர் பிரிவில், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார், பெல்ஜியத்தின் டேவிட் கோபினை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். அமெரிக்காவின் பெஞ்சமின் ஷெல்டன், அர்ஜென்டினாவின் மரியானோ நவோனியை 6-3, 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
What's Your Reaction?






