தமிழ்நாட்டில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்கள் பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும்.

இது குறித்து தென்மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
06-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
07-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
08-02-2025 முதல் 11-02-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
What's Your Reaction?






