விராட் கோஹ்லியின் 300வது ஒரு நாள் போட்டி – மறக்க முடியாத தருணம்
நியூசிலாந்து எதிரான நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டி, விராட் கோஹ்லிக்கு அவரது 300வது போட்டியாக அமைந்தது. இந்த சாதனையை நிகழ்த்திய ஏழாவது இந்திய வீரராக அவர் இடம் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து எதிரான நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டி, விராட் கோஹ்லிக்கு அவரது 300வது போட்டியாக அமைந்தது. இந்த சாதனையை நிகழ்த்திய ஏழாவது இந்திய வீரராக அவர் இடம் பெற்றுள்ளார். 300வது போட்டியில் களம் இறங்கும் முன், அவரது சக வீரர்கள் கோஹ்லிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியா பேட்டிங் செய்யத் தொடங்கிய பின்னர், சக வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டது.
இந்த முக்கியமான போட்டியில் கோஹ்லி பெரிய இன்னிங்ஸ் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் 11 ரன்னுக்கே அவுட் ஆனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 2008ஆம் ஆண்டு இலங்கையின் தம்புல்லா நகரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் கோஹ்லி முதன்முறையாக களமிறங்கினார். அதன்பிறகு, 51 சதங்கள் அடித்து, ஒரு நாள் போட்டிகளில் 14,000 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ள சாதனையாளர் ஆகியுள்ளார். மேலும், 95 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
விவியன் ரிச்சர்ட்ஸ் – "கோஹ்லி எனக்கு நினைவூட்டுகிறார்"
விராட் கோஹ்லியின் 300வது போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்வான் விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். "கோஹ்லி பல நேரங்களில் எனது விளையாட்டை நினைவூட்டுகிறார். தைரியமாக போராடும் வீரர்களே வெற்றி பெறுவார்கள். கோஹ்லி தனது திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். தேவைப்படும் தருணங்களில் வீரியத்துடன் செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருகிறார். அவரது ஆட்டத்தில் காணப்படும் ஆக்ரோஷம், கிரிக்கெட்டுக்கான அவரின் அளப்பரிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. இது அவரை அற்புதமான கிரிக்கெட் வீரராக உருவாக்கியுள்ளது" என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
What's Your Reaction?






