சென்னையில் தங்கம், வெள்ளி விலை மாற்றம்

சென்னை: கடந்த மாதம் 25ஆம் தேதி, தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.64,600 என வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது.

சென்னையில் தங்கம், வெள்ளி விலை மாற்றம்

சென்னை: கடந்த மாதம் 25ஆம் தேதி, தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.64,600 என வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு சில தினங்களாக மாற்றங்கள் காணப்பட்டது.

நேற்று முன்தினம், தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.8,030 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.64,240 ஆகவும் விற்பனையாகியது.

அதன் பின்னர், நேற்று (சனிக்கிழமை) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.8,040 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.64,320 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,08,000 என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow