கண்மாய் மீன் ஏலம் தடை செய்ய கோரிக்கை – ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல்
மதுரை: ஊணூகால் புளியங்குளம் கிராமத்தில் வணிக ரீதியாக மீன் ஏலம் நடத்த தடை விதிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை: ஊணூகால் புளியங்குளம் கிராமத்தில் வணிக ரீதியாக மீன் ஏலம் நடத்த தடை விதிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளரிபட்டியைச் சேர்ந்த மலைபுல்லியன், கிராம பொதுமக்கள் சார்பாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், வருவாய்க்காக மீன்பிடிக்கும் போது கண்மாயில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு விவசாயம் மற்றும் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?






