இளம் வயது மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – ஒன்றிய அரசு விளக்கம்
கொரோனா தடுப்பூசி மற்றும் இளம் வயது திடீர் மரணங்கள் தொடர்பாக நடந்த ஆய்வில், தடுப்பூசி செலுத்தியவர்களின் மரண வாய்ப்பு குறைவாக இருப்பதை ICMR உறுதி செய்துள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி: இளம் வயதில் திடீர் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என்ற கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலங்களவில், திமுக எம்.பி. கனிமொழி சோமு, "35 முதல் 55 வயதுடையோருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? இதுகுறித்து ஆய்வு நடந்ததா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், "18 முதல் 45 வயதுடையோரின் திடீர் உயிரிழப்பு குறித்து ICMR 2023 மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மரண வாய்ப்பு குறைவு " எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






