தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கான வாழ்த்துக்கள்.!!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கான வாழ்த்துக்கள்.!!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக இயக்கத்தின் ஆதரவாளர்கள் நன்மை திட்ட உதவிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன், எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளித்துள்ளார்.

அதில், நாளை பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்காக  பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழக மக்களும், தமிழ் மொழியும் மற்றும் தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow