இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீதான தடையை நீக்கிய மத்திய விளையாட்டு அமைச்சகம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய விளையாட்டு அமைச்சகம் நீக்கியுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீதான தடையை நீக்கிய மத்திய விளையாட்டு அமைச்சகம்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று நீக்கியுள்ளது.

பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, அவர் பதவி நீக்கப்பட்டார். அதன் பின்னர், அவரது ஆதரவாளராக கருதப்படும் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பொறுப்பேற்றதும், பிரிஜ் பூஷணுக்கு செல்வாக்குள்ள கோண்டா நகரில் மல்யுத்த போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, 2023ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மல்யுத்த போட்டிகள் மற்றும் சங்கத்தின் நடவடிக்கைகள் முடங்கியிருந்தன. இந்நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சகம் தற்போது இந்த இடைக்கால தடையை நீக்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow