எலி மருந்து ஸ்பிரேவை வைத்து விளையாடிய சிறுவர்கள்
எலி மருந்து ஸ்ப்ரே அடித்து விளையாடிய சிறுவர்கள்! முகத்தில் தெளித்ததால் விபரீதம் ஏற்பட்டது! புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மண்ணவேளாம்பட்டி உள்ளது.

எலி மருந்து ஸ்ப்ரே அடித்து விளையாடிய சிறுவர்கள்! முகத்தில் தெளித்ததால் விபரீதம் ஏற்பட்டது! புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மண்ணவேளாம்பட்டி உள்ளது.
அப்பகுதியை சேர்ந்த 6 மற்றும் 5 வயதான சிறுவர்கள் ரிஷிகேஷ், ரித்திக், கருப்பசாமி, தனபிரியன் ஆகியோர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினர். ரிஷிகேஷ் வீட்டுக்கு பின்புறம் அவர்கள் நான்கு பேரும் ஒன்றாக விளையாடினர்.
அப்போது காரில் பயன்படுத்தும் எலிகளை கொல்லும் ஸ்பிரே அங்கு கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுவர்கள் ஒருவருக்கு ஒருவர் முகத்தில் அடித்து விளையாடினர்.
முகத்தில் வழிந்த எலிமருந்தை நாவால் ருசியும் பார்த்துள்ளனர். சிறுவர்கள் எலிமருந்தை முகத்தை அடித்து விளையாடுவதை பார்த்த உறவினர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். பதட்டமடைந்த பெற்றோர்கள் உடனடியாக சிறுவர்களை அன்னவாசல் அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர்.
டாக்டர்கள் சிறுவர்களை கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுவர்கள் உயிருக்கு பாதிப்பு இல்லை. இருப்பினும் நான்கு நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர். எலி மருந்தை வைத்து சிறுவர்கள் விளையாடிய சம்பவம் புதுகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






