தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தப்பட்ட ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய வருவாய் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய வருவாய் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் கடலோர காவல்படை உதவியுடன் அதிகாரிகள் கப்பலை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அதன்பிறகு, கப்பலை தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்து முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. அந்த கப்பலில் பதுக்கி வைத்திருந்த 'ஹசீஸ்' எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டது.
இதற்காக கைது செய்யப்பட்ட 11 பேரில் 2 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






