பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராட்டம் – த.வெ.க. போராளிகளை கைது செய்ததால் விஜய் கண்டனம்
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளை கண்டித்துப் போராட்டம் நடத்திய த.வெ.க. கட்சியினரை காவல்துறை கைது செய்ததைக் கடுமையாக கண்டிப்பதாக அக்கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளை கண்டித்துப் போராட்டம் நடத்திய த.வெ.க. கட்சியினரை காவல்துறை கைது செய்ததைக் கடுமையாக கண்டிப்பதாக அக்கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் தமிழகம் முழுவதும் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மகளிருக்கு உரிய உரிமைகள் கிடைக்காமல் இருக்கும் நிலை உருவாகி இருப்பதால், அவற்றை வலியுறுத்தி போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஆனால், தமிழக அரசு, மக்களின் தேவை குறித்து கூட பேச விடாமல், போராட்டத்தில் ஈடுபட்ட மகளிரையும் கழகத் தோழர்களையும் கைது செய்தது அராஜகம். இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று விஜய் கூறியுள்ளார்.
அத்துடன், "தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட கழக மகளிர் மற்றும் தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?






