குஜராதில் பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் – அமித்ஷா அடிக்கல் நாட்டினார்
குஜராத் காந்தி நகரில் ₹316.82 கோடி மதிப்பில் பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பாரா ஒலிம்பிக் போட்டிக்கான உயர் நிலைப் பயிற்சி மையத்தின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த மையம் ₹316.82 கோடி மதிப்பில் உருவாக உள்ளது. விழாவில், காணொலி வாயிலாக கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பேசிய அவர், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அகமதாபாத்தில் 10 மைதானங்கள் அமைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், குஜராத் மாநிலத்தின் இந்தாண்டு பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
What's Your Reaction?






