ஓடும் ரயிலில் கர்ப்பணிக்கு நேர்ந்த கொடுமை
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று பின் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் பணியாற்றி வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் கர்ப்பிணி ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊர் செல்ல இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்துள்ளார்.
குடியாத்தம்- கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது அவர் தனியாக இருப்பதை பார்த்த ஒரு நபர் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்யமுயன்றபோது, தான் 4 மாத கர்ப்பிணி என்று கூறி தப்பமுயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் பலத்த காயமடைந்து தண்டவாளத்தில் கிடந்த கர்ப்பிணியை சிலர் மீட்டு வேலூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து யார் அந்த கொடூரன் என விசாரித்தபோது, பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமராஜ் என்ற சைக்கோ என தெரியவந்தது.
2022, 2024 ஆம் ஆண்டு என இரண்டு பெண்களை கொலை செய்து குண்டர் சட்டத்தில் சிறை சென்று வெளியே வந்த ஹேமராஜ் மீண்டும் தனது இச்சையை தீர்த்துக்கொள்ள முயன்று இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
What's Your Reaction?






