அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த வழக்கு: மாணவனின் தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தருமபுரி அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவன் விஷாலின் தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த வழக்கு: மாணவனின் தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை: தருமபுரி குடிமியம்பட்டி அரசு பள்ளியில், 2016ல் கழிப்பறைக்கு சென்ற போது, பாராமரிப்பு இல்லாத சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் விஷால் உயிரிழந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், மாணவனின் தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதை 4 வாரங்களுக்குள் வழங்குமாறு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow