அனைத்துக்கட்சி கூட்டம்
அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

5ம் தேதி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்க நேரிடும் -முதலமைச்சர்
தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கும் அபாயம்.. தமிழ்நாட்டு உரிமையை காக்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31ஆக குறையும் அபாயம்.
இந்தியாவின் முக்கிய இலக்கான மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஆனால், மக்கள்தொகை குறைவாக இருப்பதால் எம்.பி.க்கள் எண்ணிக்கையும் குறையும் சூழல் உள்ளது. இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை.பற்றிய கவலை அல்ல. மாநில உரிமை சார்ந்தது.
அதிக எம்.பி.க்கள் இருந்தால் தான் நீட், மும்மொழிக் கொள்கை, நிதி பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்.
What's Your Reaction?






