விதிமீறி வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 40 ஏஜென்டுகளின் உரிமம் ரத்து: "பஞ்சாப் போலீஸ் அதிரடி"

அமெரிக்காவிற்க்கு சட்டவிரோதமாக நுழைந்த மக்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடுக்கிவிட்டுள்ளார்.

விதிமீறி வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 40 ஏஜென்டுகளின் உரிமம் ரத்து: "பஞ்சாப் போலீஸ் அதிரடி"

அமிர்தசரஸ்: அமெரிக்காவிற்க்கு சட்டவிரோதமாக நுழைந்த மக்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடுக்கிவிட்டுள்ளார். அந்த வகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அவரவர் நாடுகளுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கிறார். இந்தியாவை சேர்ந்த 330க்கும் மேற்பட்ட மக்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். பயண முகவர்கள் மூலம் பல லட்சம் ரூபாயை செலுத்தி சட்டவிரோதமாக இவர்கள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.

அதனால் தற்போது நாடு கடத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலி பயண முகவர்கள் மீது பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாஹ்ன் கூறுகையில், ‘வெளிநாடுகளுக்கு உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பி வைத்த பயண முகவர்கள் 40 பேரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் மையங்களும் மூடப்பட்டன. சட்டவிரோதமாக மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பயண முகவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow