த.வெ.க. தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விஜய் தனது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து, அவர் சமீபத்தில் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த காட்சியில், தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 26-ந்தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மார்ச் முதல் வாரத்தில் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒய் பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் 8 முதல் 11 பேர் பாதுகாப்பை வழங்குவார்கள். தமிழ்நாட்டிற்குள் மட்டும் இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?






