ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா அபார வெற்றி!

புதுடெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து முதலில் பேட் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

வெற்றி இலக்காக 252 ரன்கள் நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா (76), கே.எல். ராகுல் (34) சிறப்பாக விளையாடினர். இந்தியா 49வது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியை அடுத்து, இந்தியா 2002, 2013 தொடருக்கு பிறகு 2025 சாம்பியன்ஸ் கோப்பையையும் கைப்பற்றியது. ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வானார், ரச்சின் ரவீந்திரா தொடரின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow