இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி அசத்தல்: மகளிர் புரோ ஹாக்கி லீக்
புவனேஸ்வர்: மகளிர் புரோ ஹாக்கி லீக் போட்டியில் உலகின் முதன்மை அணியான நெதர்லாந்து அணியுடன் இந்தியா கடந்த நேற்று முன்தினம் போட்டியிட்டது.

புவனேஸ்வர்: மகளிர் புரோ ஹாக்கி லீக் போட்டியில் உலகின் முதன்மை அணியான நெதர்லாந்து அணியுடன் இந்தியா கடந்த நேற்று முன்தினம் போட்டியிட்டது. நெதர்லாந்து அணியின் வீராங்கனைகள் பியன் சாண்டர்ஸ் 17வது நிமிடத்தில் மற்றும் ஃபே வான்டர் எல்ஸ்ட் 28வது நிமிடத்தில் அற்புதமாக கோல்கள் அடித்து, தங்கள் அணியை முன்னேற்றின. நெதர்லாந்து குழு உறுதியாக நடந்து வரும் வேளையில், இந்திய வீராங்கனை தீபிகா 35வது நிமிடத்தில் மற்றும் பல்ஜீத் கவுரும் 43வது நிமிடத்தில் தொடர்ந்து கோல்கள் அடித்து கவர்ந்தனர்.
இதனால் இரு அணிகளும் சம நிலைக்கு வந்தன. அதன் பின் கடைசி வரை யாரும் கோல் போடாததால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வென்றது. இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய மகளிர் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?






