அரக்கோணத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை – கடைக்கு சீல், ₹25,000 அபராதம்
அரக்கோணத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கடை உரிமையாளருக்கு ₹25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மார்ச் 12: அரக்கோணத்தில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவும், டவுன் போலீசாரும் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, டவுன் போலீசார் சம்பந்தப்பட்ட கடை மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், கடைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டதுடன், ₹25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
What's Your Reaction?






